மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படுகிறது. இந்த முறையாவது அதிமுகவுக்கு சான்ஸ் கிடைக்குமா? என பரபரக்கிறது டெல்லி அரசியல். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த மே 30-ம் தேதி 2-வது முறையாக பொறுப்பேற்றது. மத்திய அமைச்சர்களாக மொத்தம் 58 பேர் பதவி வகித்து வருகின்றனர். புதிய அரசு பதவியேற்ற போது கடந்த முறை வர்த்தகத்துறை அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபுவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஆனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 5 சதவீதமாகக் குறைந்தது. ஆட்டோமொபைல் துறையில் விற்பனைக் குறைவு, முக்கிய துறைகள் உற்பத்தி சரிவு போன்றவற்றால் பொருளாதாரம் சுணக்க நிலையில் உள்ளது. பொருளாதார சுணக்கத்தை தீர்க்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வரும் பிரதமர் மோடி, அதற்கு உறுதுணையாக இருக்கும் பொருட்டு தொழில் மற்றும் வர்த்தகத் துறையை சுரேஷ் பிரபு வசம் மத்திய அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுபோலவே நரேந்திர சிங் தோமர், ரவிசங்கர் பிரசாத் போன்றவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறதுஊடகங்களில் உரையாற்றவும், அரசின் திட்டங்களை மக்களிடம் விளக்கவும் ரவிசங்கர் பிரசாத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க பிரதமர் விரும்புவதாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி சட்டப் பேரவைத் தேர்தல் கட்சியின் வளர்ச்சியை முன்னிறுத்தி வேறு மத்திய அமைச்சர் பதவியில் அமர்த்தப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது15 நாட்களுக்குள் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் எனவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனமத்திய அமைச்சர் பதவி துணை முதல்வர் மகனுக்கா? முதல்வர் இ.பி.எஸ்.சின் ஆதரவாளர் வைத்திலிங்கத்துக்கா? என்ற உள்ளடி வேலைகளால் ஏற்கனவே மத்திய அமைச்சரவையில் பிடிக்க முடியாமல் கோட்டை விட்ட அதிமுகவுக்கு இந்த முறையாவது சான்ஸ் கிடைக்குமாஎதிர்பார்ப்பு எகிறி உள்ளது.